முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று கர்த்தால்
தென்பகுதியை சேர்ந்த மீனவர்கள் முல்லைத்தீவு கட்ற்பரப்பில் மீனபிடிப்பதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி மூன்று மீனவர்கள் இன்று முன்றாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினாலும் இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக முல்லைத்தீவு மீனவர்கள் சந்தேகம் கொண்டுள்ளார்கள்.
உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தும் மீனவர்கள் சிலர் வட மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் இதனால் பரப்புரை நோக்கில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டார்கள்.
ஜனநாயக ரீதிலான எந்த ஒரு போராட்டத்தையும் முல்லைத்தீவில் முன்னெடுக்க முடியாதெனவும், அவ்வாறு போராட்டம் நடத்தினாலும் படையினர் அவர்களை நிழற்படம் எடுப்பது வழமையெனவும், ஆனால் இன்று ஹாத்தால் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டும் படையினர் எந்தவிதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லையெனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை வெளியேற்றவுள்தாக கடற்றொழில் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன அறிவித்தமை, உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதெனவும், ஆனாலும் தமது பிரச்சினைக்கு எந்த வழியிலாவது தீர்வு கிடைத்தால் போதுமென்ற அடிப்படையில் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் மீனவர்கள் சிலர் கூறியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று கர்த்தால்
Reviewed by Admin
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment