இரண்டு வாரங்களில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்படும்?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உறுதிமொழியை வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.
மாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுவதனை தடுக்குமாறு கோரி கதிர்காமத்திலிருந்து கொழும்பிற்கு சிஹல ராவய அமைப்பினர் பாத யாத்திரை செய்து, ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
மாடுகள் கொல்லப்படுவதனை தடுக்குமாறு கோரி சிஹல ராவய அமைப்பு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் ஒப்படைத்துள்ளது.
மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்ளும் தரப்பினருக்கு தேவையான இறைச்சியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொடுக்குமாறு குறித்த அமைப்பு கோரியுள்ளது.
எனினும், இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டுமென அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
இந்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் விரைவில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் எனவும் சிஹல ராவய அமைப்பு அறிவித்துள்ளது.
இரண்டு வாரங்களில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்படும்?
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment