அண்மைய செய்திகள்

recent
-

வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே நல்லது: விக்னேஸ்வரன்

வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பது நல்லது என்பதே என் கருத்து. 13ஆவது திருத்தச்சட்டத்தின் நோக்கமே வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை தீர்த்து வைப்பது என்பதே.


1987இல் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டு இரு மாகாணங்களும் இணைந்ததற்கு காரணம், இரண்டு மாகாணங்களிலுமே பொதுவானதாக தமிழ்மொழி இருந்ததுதான். அந்த நேரத்தில் கிழக்கில் இருந்த முஸ்லிம் மக்கள், தமிழ் பெரும்பான்மையைப் பற்றிய அச்சம் கொண்டிருந்தார்கள்.

இப்போது அவையெல்லாம் சீர்செய்யப்பட்டு விட்டன. வடக்கிலும் கிழக்கிலும் பாவிக்கப்படுவது ஒரே மொழி. அவர்களது கலாசாரம் தனி. சுவாத்தியம் கூட மற்ற மாகாணங்களில் இருந்து வேறுபட்டது. அதனால் அவர்களை தங்களை தாங்களே தங்கள் மொழியில் ஆட்சி செய்ய அனுமதிப்பது அவசியம். வடக்கில் வந்து வாழ்வதை ஒருவரும் எதிர்க்கவில்லை என்று முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 டெய்லிமிரர் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் விக்னேஸ்வரனுடனான நேர்காணலின் முழு தமிழ் வடிவம் வருமாறு.


வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதே நல்லது: விக்னேஸ்வரன் Reviewed by Admin on July 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.