அண்மைய செய்திகள்

recent
-

பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் தனியார் கல்வி நிறுவனங்களின் சமகாலச் சவால்கள்

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.ஒவ்வொரு பிரதேசத்திலும் பல பல தனியார் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.இங்கு இருக்கின்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கிடையே சரியான ஒரு புரிந்துணர்வு இல்லை.


தனியார் வகுப்புக்களின் முகாமையாளர்களுக்கு இடையேயும், தனியார் கற்பித்தலில் ஈடுபடும் பிரத்தியேக ஆசிரியர்களிடையேயும் கருத்து மோதல்கள் ,துண்டுப்பிரசுர மோதல்கள் போன்றவை  நடைபெறுவதைக் காணக் கூடியதாக உள்ளது.

தனியார் வகுப்புக்களில் அறவிடப்படும் பணத்தொகைகள் ,கற்பிக்கும் நேரம் போன்றவை உரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்படவேண்டும்.மாகாணத்திற்குட்பட்ட முன்பள்ளிகளை அரச அதிகாரிகள் ,கண்காணிப்பதுபோல, கல்வியமைச்சு, தனியார் வகுப்புக்களை கண்காணிப்பதற்கு ஒரு சரியான பொறிமுறையை உருவாக்கவேண்டும்.

அத்துடன் ஒழுக்கக்கோவையும் அமுல்ப்படுத்தப்படவேண்டும்.
தனியார் வகுப்புக்களின் சுற்றாடல்,தளபாடவசதிகள் போன்றவற்றை பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள்,சுற்றாடல் அதிகாரிகள்,சிறுவர் அதிகாரிகள் போன்றோர் பரிசோதிக்கவேண்டும்.சில தனியார் வகுப்புக்கள் நடைபெறும் மண்டபங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நாய்,பூனை,ஆடு,மாடு என்பன உலவுவதைக் காணமுடிகிறது.

வகுப்புக்கள் நடைபெறா வேளையில் மேற்சொல்லப்பட்ட மிருகங்கள் உட்பிரவேசிக்காதவாறு பாதுகாக்கப்படவேண்டும்.
பெரும்பாலான தனியார் வகுப்புக்களில் மாணவர்களுக்குப் பொருத்தமில்லாத தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளன.வெறும் இரண்டு பலகைகளில் ஒன்றை மேசையாகவும்,மற்றயதை வாங்காகவும் அமைத்துள்ளனர் .இதில் மாணவர்கட்கு சாயும் வசதிகள் இல்லை.இதனால் உடலியல்ரீதியாக பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.இதனை சிறுவர்நல அதிகாரிகள் பரிசோதிக்கலாம்.

பாடசாலைகள் போன்று மாணவர்களின் ஒழுக்காற்றுவிடயத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் அதிக அக்கறை காட்டவேண்டும்.தனியார் வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்களும் ,அங்கு பாடங்களைக் கற்பிக்கும் ஆசியர்களும் மிகுந்த பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்.
பொருளாதாரப்போட்டி காரணமாக தனியார் கல்விநிறுவனங்களுக்கு எதிராகவும்,ஆசிரியர்கட்கு எதிராகவும் மாணவர்களிடையேயும் பிரச்சாரம் செய்வதும்,ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கில் கீழ்த்தரமான துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுவதும் ஆரோக்கியமானதல்ல.


எந்தத்தனியார் வகுப்புக்குச்சென்று ,எந்த ஆசிரியரிடம் கற்கப்போகிறேன் என்பதைத்தீர்மானிக்கும் உரிமை அம்மாணவனுக்கும் ,பெற்றோருக்கும் உண்டு.இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.சிறப்பாக கல்வியை கொண்டு செல்லும் தனியார் வகுப்புக்களை நடாத்தும் நிறுவனங்கள் தமக்கு இடையூறு செய்வோருக்கெதிராக சட்ட நடவெடிக்கை எடுக்க முடியும்.


கா.பொ.த (உ/த) கணித விஞ்ஞான வகுப்புக்களை நடாத்தும் சில தனியார் கல்விநிறுவனங்கள் மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு பொருத்தமான தளபாடங்கள்,குளிரூட்டப்பட்ட அறைகள் என்பவற்றை வழங்கி வருகின்றது.உண்மையில் இது ஒரு பாராட்டப்படவேண்டிய நடவடிக்கை ஆகும்.தரமான சேவைகள் ,மாணவர் திருப்தி ,சிறந்த அடைவுமட்டம் உள்ள நிறுவனங்கள் அறவிடும் கட்டணங்கள் தொடர்பில் மாணவர்களோ,பெற்றோர்களோ அதிருப்தி அடைவதில்லை.

மாணவர்கள் தனியார் வகுப்பில் இணையுமுன்னர் அந்த நிறுவனத்தின் கடந்தகால அடைவுகள் ,கற்பிக்கும் ஆசிரியர்களின் தரம் ,கற்பித்தல் திறமை ஆகியவற்றை ஆராய்ந்து பூரணமுடிவு எடுக்க வேண்டும்.சுருக்கமாக தனியார் வகுப்புக்களை நடாத்துவோர் தமக்கிடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்தி புரிந்துணர்வுடன் செயற்படுவது சிறப்பாக இருக்கும்.



கே.சி.எம்.அஸ்ஹர்

பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் தனியார் கல்வி நிறுவனங்களின் சமகாலச் சவால்கள் Reviewed by Admin on July 18, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.