ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் உட்பட கடற்படையைச் சேர்ந்த 16 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களில், திருகோணமலையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட கடற்படையை சேர்ந்தவர்களே உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை வர்த்தகரே ஆட்கடத்தலின் பிரதான முகவராக செயற்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவர்கள், மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கந்தளாய், களுவாஞ்சிகுடி மற்றும் கல்குடா ஆகிய இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இருவாரங்களாக மாறுவேடத்தில் விசாரணைகளை நடத்தி வந்ததாகவும் அதன்பின்னரே இவர்களைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா அனுப்பி வைப்பதற்கு பெருந்தொகைப் பணத்தினை அறவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையின் சமிக்ஞை பிரிவு ஆலோசகர், சமிக்ஞை பிரிவில் கடமையாற்றுவோர் இருவர், ஊழியர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களிடம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த வர்த்தகர் உட்பட கடற்படையைச் சேர்ந்த 16 பேர் கைது
Reviewed by Admin
on
August 13, 2013
Rating:
No comments:
Post a Comment