காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் புதிய சட்டம்
இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் பிடியாணை தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.
புதிய திருத்தங்கள் புதிய சட்டமூலமாக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாக நீதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன. கடத்தப்பட்ட ஒருவரின் உடல் கிடைக்காத நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் போனதுமான ஏற்பாடுகளை கொண்டிருக்கவில்லை.
அத்துடன் குற்றவாளிகளை அடையாளம் காணவும் தண்டனைகளை தீர்மானிப்பதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன. புதிய சட்டம் கொண்டு வரப்படும் போது கடத்தப்பட்டவர்களின் உடல்கள் கிடைக்கும் சூழ்நிலையில் முறையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவும் எனவும் அமைச்சின் வட்டாரங்கள் கூறின.
இலங்கையில் மோதல்கள் இடம்பெற்ற சமயத்தில் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இதன் காரணமாக அதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்தன.
காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் புதிய சட்டம்
Reviewed by Admin
on
August 28, 2013
Rating:

No comments:
Post a Comment