அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முள்ளிக்குளத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கோத்தபாய ராஜபக்சவால் வீடுகள் கையளிப்பு

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட முள்ளிக்குளம் புனித மரியாள் தேவாலயம் நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

 இந்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையும் கலந்து கொண்டார். 175 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இந்த தேவாலயம் கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் காரணமாக சேதமடைந்திருந்துடன், கடற்படையினரால் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முள்ளிக்குளத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 26 புதிய வீடுகளை பாதுகாப்புச் செயலாளர் பயனாளிகளிடம் நேற்று கையளித்துள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் கடற்படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.







மன்னார் முள்ளிக்குளத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு கோத்தபாய ராஜபக்சவால் வீடுகள் கையளிப்பு Reviewed by Admin on August 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.