சிறைச்சாலைக்குள் கைதி தூக்கிட்டு தற்கொலை
நேற்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது பத்தேகம, கலகொட பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய காமினி லியன ஆராச்சி என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் குறித்த கைதியை பத்தேக பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இவர் தான் அணிந்திருந்த சாரத்தினை கிழித்து சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ள நபரின் சடலம் பத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைச்சாலைக்குள் கைதி தூக்கிட்டு தற்கொலை
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment