அண்மைய செய்திகள்

recent
-

இன்று நண்பர்கள் தினம்-மன்னார் இணைய நண்பர்களிற்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் (Friendship Day) உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் தினம் முதன் முதலில் 1935 ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. அது படிப்படியாக உலகம் முழுவதும் வளர்ந்து பரவியுள்ளது.

உலகம் முழுக்க நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உயிர் தருவான் தோழன் என்பார்கள். ஏழை, பணக்காரன், சாதி, மத பேதமின்றி, வயது வித்தியாசம் இன்றி, பால் இன வேறுபாடு இல்லாமல் வருவது நட்பு. இருந்தாலும் பெரும்பாலும் கிட்டத்தட்ட ஒரே வயதில் உள்ளவர்கள்தான் நண்பர்களாக, தோழிகளாக இருக்கிறார்கள்.

 காரணம் வகுப்பில் படித்த தோழர்கள், வேலை செய்யும் இடங்களில் பழகியவர்கள் இப்படியாகத்தான் நிறைய நண்பர்கள், தோழிகள் இருக்கிறார்கள். நண்பர்கள் தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பது, எஸ்.எம்.எஸ். அனுப்புவது, மெயில் அனுப்புவது, நேரில் வீட்டுக்கு சென்று அல்லது சந்தித்து பேசி மகிழ்தல், நண்பர்கள் தின கயிறு கட்டுவது என அண்மைக் காலத்தில் களைகட்டி வருகிறது.

 நண்பர்கள் தின கயிறு கட்டி மகிழ்கிறார்கள். பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து நண்பர் தினத்தை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள். நட்பு எல்லை என்பதே இல்லை என்பதே அதன் சிறப்பு.


இன்று நண்பர்கள் தினம்-மன்னார் இணைய நண்பர்களிற்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் Reviewed by Admin on August 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.