அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள், தமக்கான விரிவுரைகளை உடனடியாக ஆரம்பிக்க கோரி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (13) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுண்கலை பீட சித்திரமும் வடிவமைப்பும் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த 20 நாட்களாக விரிவுரைகள் நடைபெறவில்லை எனவும் அவற்றை மீள ஆரம்பிக்க கோரியுமே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது துறைக்கு நிரந்தர விரிவுரையாளர்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நியமிக்கப்படவில்லை. எமது இணைப்பாளரின் சொந்த முயற்சியினால் எமது துறை சார்ந்தவர்கள் வருகை தரு விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இணைப்பாளருக்கும் இடையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இணைப்பாளர் பதவி விலக்கிக் கொண்டார்.

அதனால் வருகை விரிவுரையாளர்களாக நியமிக்கப்படிருந்தவர்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிக்கவில்லை.

இதனை அடுத்து எமக்கான விரிவுரைகள் கடந்த 20 நாட்களாக நடைபெறவில்லை.

எமக்கான விரிவுரைகளை ஆரம்பிக்குமாறும் இணைப்பாளரை நியமிக்குமாறும் நிரந்தர விரிவுரையாளர்களை நியமிக்குமாறும் பல தடவை பீடாதிபதிக்கும், துணைவேந்தருக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேவேளை எமது துறைக்கு நியமிக்கப்படவுள்ள விரிவுரையாளர்கள் எமது துறை சார்ந்தவர்களாகவும் தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறோம்.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் பல்கலைக்கழக நிர்வாகம் எம்முடன் பேச்சுகளை நடத்தவில்லை.

இருந்த போதும் எமக்கு ஒரு காத்திரமான பதிலை பல்கலைக்கழக நிர்வாகம் அளிக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த மாதம் 31 திகதி கலைப்பீட 3ம், 4ம் வருட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து 3ம், 4ம் வருட மாணவர்கள் கடந்த 14 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தினுள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான விரிவுரைகள் இரண்டு கிழமைகளுக்கு பின்பு நாளை ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழ் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Reviewed by Admin on August 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.