பட்டதாரிப் பயிலுநர்கட்கு எப்போது நிரந்தர நியமனம் கிடைக்கும்
இவர்கட்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு 10 000.00 மட்டும் இது இன்றைய வாழ்க்கைச்செலவுக்குப் போதாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.இவர்களில் பலர் திருமணம்புரிந்த குடும்பத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முசலிப்பிரதேச செயலாளர் பிரிவில் 35 பட்டதாரிப் பயிலுநர்களும்,நானாட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் 52 பட்டதாரிப்பயிலுநர்களும் கடமைபுரிந்தனர்.
இரு பிரதேச செயலகங்களில் இருந்தும் தலா 3 பேர் விகிதம் சமுர்த்தி சேவைக்கு உள்வாங்கப்பட்டு நிரந்தர நியமனத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டனர்.ஏனையோர் தமக்கு எப்போது நிரந்தர நியமனம் கிடைக்குமென்று ஏக்கத்துடன் உள்ளனர். கா.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுபவர்களே பல்கலைக்கழகம் செல்கின்றனர். அங்கு 3-4, வருடங்கள் கழித்துவிட்டு வெளியில் வந்தும் எவ்வித தொழிலும் இன்றி இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இந் நிலைமையை அறிந்து கொண்ட பலர் பல்கலைகழகத்திற்காக விண்ணப்பிக்காது, கல்விக்கல்லூரிக்காக விண்ணப்பித்துச் செல்கின்றனர். கல்விக் கல்லூரிகளில் 02 வருடக் கற்கை நெறியும் 01 வருடக்கற்பித்தல் பயிற்சி நெறியும் உள்ளது. இதனை வெற்றிகரமாகப்பூர்த்தி; செய்து வெளியேறி வருபவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் கிடைக்கிறது. இது உத்தரவாதமாகவும் உள்ளது.
பட்டதாரிகள் நியமனத்திற்காக ஏக்கத்துடன் இருக்கும் போது டிப்ளோமா தாரிகளுக்கு உடன் நியமனம் கிடைப்பது எவ்வகையில் நியாயம். ஆகவே, பட்டதாரிகளுக்கும் விரையில் தொழில் வழங்கக்கூடிய செயற்றிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இப் பயிலுநர்களுன் கலந்துரையாடிய போது, இதில் உள்ள பெரும்பாலான பெண் பிள்ளைகள் தங்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்க வேண்டுமென விரும்புவதாக் தெரிவித்தனர்.
வடக்கில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளுக்கு இவர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுக்கலாம். ஆகவே, இவர்களிற்கு விரைவில் நிரந்தர நியமனம் கிடைப்பதற்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும், அமைச்சர் பசீல் ராஜபக்ஷ அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் அவர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பட்டதாரிகள் என்றும் அரசிற்கு நன்றி தெரிவிப்பவர்களாகவும் , அரசின் வெற்றிற்காக உழைப்பவர்களாகவும் திகழ்வர் என்பது உறுதியாகும்.
பட்டதாரிப் பயிலுநர்கட்கு எப்போது நிரந்தர நியமனம் கிடைக்கும்
Reviewed by Admin
on
August 20, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment