மன்னார் பிரதேசத்தில் அதிகளவான கஞ்சா போதைவஸ்து மீட்பு-சந்தேக நபர்களும் கைது.
தலைமன்னார்,மற்றும் மன்னார் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பேரில் குறித்த கஞ்சா போதைவஸ்து அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த போதைவஸ்து தொடர்பில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் மன்னார் பகுதிக்கு கடத்தி வரப்பட்ட வேளையிலேயே பொலிஸார் கஞ்சாவினை கைப்பற்றியதோடு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதும் பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள் மன்னார் நகரில் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,கைப்பற்றப்பட்ட கஞ்சாவும்,சந்தேக நபர்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மன்னார் பிரதேசத்தில் அதிகளவான கஞ்சா போதைவஸ்து மீட்பு-சந்தேக நபர்களும் கைது.
Reviewed by Admin
on
August 05, 2013
Rating:

No comments:
Post a Comment