அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சமூர்த்தி அலுவலகர்களை பயன்படுத்தி அரசிற்கு தேர்தல் பிரச்சாரம்-செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

மன்னார் மாவட்டத்தில் சமூர்த்தி திட்ட அலுவலகர்களை பயன்படுத்தி மக்களிடம் விபரங்களை திரட்டுகின்ற போர்வையில் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்ற விபரம் தற்போது திரட்டப்பட்டு வருவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூர்த்தி அலுவலகர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த நிலையில் இவர்களை மக்களின் விபரங்களை திரட்டுவதற்காக விண்ணப்பப்படிவங்களுடன் மக்களிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த விண்ணப்ப படிவத்தில் சுய விபரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட நிலையில் இறுதி கேள்வியாக எந்த கட்சிக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். குறித்த கேள்வி மக்கள் மத்தியில் சந்தேகங்களையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

 மக்களிடம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததன் பின் தொலைபேசி இலக்கமும் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே குறித்த விடயம் தொடர்பான ஆதாரங்களை எடுத்து தேர்தல் ஆணையாளரிடமும்,தேர்தல் கண்காணிப்புக்குழுக்களிடமும் முறையிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


மன்னாரில் சமூர்த்தி அலுவலகர்களை பயன்படுத்தி அரசிற்கு தேர்தல் பிரச்சாரம்-செல்வம் எம்.பி குற்றச்சாட்டு Reviewed by Admin on August 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.