திறந்த மனதுடனேயே இலங்கை செல்கிறேன்; சீரான மதிப்பீட்டை மேற்கொள்வேன் என்கிறார் நவிப்பிள்ளை
இலங்கை மீது சர்வதேச ரீதியில் போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தனது இலங்கைப் பயணம் குறித்து ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 30 வருடகாலப் போர் முடிவடைந்துள்ள நிலையில் முதல் முறையாக நாளை ஞாயிற்றுக்கிழமை நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பிக்கிறார்
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளையும் அரச சார்பற்ற அமைப்புகளின் அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு, நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் நேரில் கண்டறிய வேண்டும் எனவும் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பிலும் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனது சொந்த ஆராய்வின் மூலம் இலங்கை தொடர்பில் சீரான மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளேன்' என்றும் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார். இதேவேளை, இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது கிழக்கு மாகாணத்துக்கான பயணத்தின்போது திருகோணமலைக்கும் செல்லவுள்ளார். அவர் தனது திருகோணமலை பயணத்தின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துச் சமகால நிலைமைகளைப் பற்றிக் கேட்டறிந்து கொள்வார் என்று தெரிய வருகின்றது.
திறந்த மனதுடனேயே இலங்கை செல்கிறேன்; சீரான மதிப்பீட்டை மேற்கொள்வேன் என்கிறார் நவிப்பிள்ளை
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:

No comments:
Post a Comment