மாணவர்களின் தேசிய அடயாள அட்டை பெறுவதில் அதிபர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் ஆட்பதிவுத் திணைக்களம்.
அக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் 16 வயது பூர்த்தியாகும் மாணவர்களின் விண்ணப்பங்களை காலதாமதமின்றி அனுப்பிவைக்குமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததாக ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார் கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறைந்தளவிலான விண்ணப்பங்கள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இம் முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள, நவம்பர் மாதம் பிறந்த மாணவர்களுக்கான விண்ணப்பங்களையும் அனுப்பிவைக்குமாறு ஆட்பதிவு ஆணையாளர் பாடசாலை அதிபர்களைக் கேட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நவம்பர் மாதம் 16வயது பூர்த்தியாகும் பரீட்சாத்திகளுக்கும் தபால் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆட்பதிவு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் தேசிய அடயாள அட்டை பெறுவதில் அதிபர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் ஆட்பதிவுத் திணைக்களம்.
Reviewed by Admin
on
August 05, 2013
Rating:

No comments:
Post a Comment