சிங்கள குடியேற்றத்தை நிறுத்து மட்டக்களப்பில் நேற்றுக் கோஷம்; கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம்
மட்டக்களப்பில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றங்கள், காணி அபகரிப்புக்கு எதிராகத் தமிழ்க் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட படுவான் கரை கெவிலியாமடு, புளுகுணாவை உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அந்தக் குடியேற்றத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரி பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
"நீதி அநீதியைக் களையட்டும் நியாயம் மலரட்டும்' எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தில், "மீறாதே மீறாதே சட் டத்தை மீறாதே?', "அரச அதிபரே! சோரம் போகாதே?', "அத்துமீறிய குடி யேற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடு', "கதிரைக்காக காணி அபகரிப்புக்கு துணைபோகாதே?', "சமாதானம் என்ன சாத்தானின் ஆக்கிரமிப்பா?', "அமைச்சரின் முகஸ்துதிக்காக அநீதிக்கு துணை போகாதே?', "காணி அபகரிப்பை நிறுத்து!', "சட்டம் ஆளுநரிடமா? அமைச்சரிடமா? அதிகாரியிடமா? புத்தபிக்குவிடமா? இரானுவத்திடமா? எடுபிடிகளிடமா?' உள்ளிட்டவாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட் டக்காரர்கள் கோங்களை எழுப்பினர்.
இதில், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோ கேஸ்வரன் மற்றும் கூட்டமைப் பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்க ளான இரா.துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார், துரைராஜ சிங்கம், ஜனா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சிங்கள குடியேற்றத்தை நிறுத்து மட்டக்களப்பில் நேற்றுக் கோஷம்; கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
August 22, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 22, 2013
Rating:

No comments:
Post a Comment