அண்மைய செய்திகள்

recent
-

P.S.M. சார்ள்ஸூக்கு இந்த வருடத்தின் சிறந்த பெண்மணிக்கான விருது

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் P.S.M. சார்ள்ஸூக்கு இந்த வருடத்தின் சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கப்படவுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள விருது வழங்கும் நிகழ்வொன்றில் இந்த விருது வழங்கப்பவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கான முகாமைத்துவ நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் துறைசார் ரீதியில் இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்ட சில பெண்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவாகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் மூடி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

தொழிசார் அபிவிருத்திகளையும் பெண்களின் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் வகையில் 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
P.S.M. சார்ள்ஸூக்கு இந்த வருடத்தின் சிறந்த பெண்மணிக்கான விருது Reviewed by NEWMANNAR on August 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.