அரசாங்கமும் இராணுவமும் அரங்கேற்றும் காடைத்தனமான நாடகமே நாவற்குழி விகாரை மீதான தாக்குதல்:சுரேஷ்
யாழ். நாவற்குழியில் விகாரை மீதான கைக்குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நாடகம் எனவும் இந்தத் தாக்குதலை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக வேடமிட்டு அரசாங்கமும் அதன் இராணுவமும் அரங்கேற்றும் காடைத்தனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாவற்குழி சிங்களக் குடியேற்றக் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரை மீது கடந்த சனிக்கிழமை இரவு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வடக்கில் நீண்ட காலமாக நிலவிவந்த யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெற்றிருக்கும் நாவற்குழி விகாரை மீதான கைக்குண்டுத் தாக்குதல், இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட ஒரு நாடகமாகும். வெலிவேரிய சம்பவத்தின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் இராணுவத்தினருக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

நாவற்குழி சிங்களக் குடியேற்றத்திட்டம் என்பது அரசாங்க நிலத்தில் மேற் கொள் ளப்பட்டுள்ள ஒரு சட்ட விரோதமான குடி யேற்றமாகும். இருந்தும், இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் திட்டமிட்ட ஒரு நாடகம் என்பது தெட்டத்தெளிவான உண் மையாகும் என்றார்.
அரசாங்கமும் இராணுவமும் அரங்கேற்றும் காடைத்தனமான நாடகமே நாவற்குழி விகாரை மீதான தாக்குதல்:சுரேஷ்
Reviewed by NEWMANNAR
on
August 13, 2013
Rating:

No comments:
Post a Comment