வேலை தேடி தலவாக்கலையிலிருந்து கொழும்பு வந்த 3 பெண்கள் வெளிநாட்டில்: குடும்பத்தார் அதிர்ச்சி
கொழும்பிற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கென தலவாக்கலை பிரதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்ட மூன்று பெண்கள் குடும்பத்தாருக்கு தெரியாத வகையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண்களினது குடும்பத்தார் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ள அதேவேளை இது தொடர்பில் தலவாக்கலை- லிந்துலை பொலிஸாருக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகை ஒன்றில் வெளியான விளம்பரத்தை நம்பியே மேற்படி மூன்று பெண்களும் கொழும்பிற்கு வேலைவாய்ப்பு தேடி வந்துள்ளனர். டீமலை, ட்ருப் , இராணிவத்தை ஆகிய தோட்டப்பகுதியை சேர்ந்த குறித்த பெண்கள் 30,000 ரூபா மாதசம்பளம், உடனடி வேலைவாய்ப்பு என்ற பத்திரிக்கை விளம்பரத்தினை நம்பி கொழும்புக்கு வேலைக்கு வந்துள்ள போது குறித்த வீட்டு உரிமையாளர்கள் ஆசைவார்த்தைகளை காட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேற்படி மூன்று பெண்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் உறுதி செய்துள்ளதோடு, அவர்கள் எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர் , எங்கு உள்ளனர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேலை தேடி தலவாக்கலையிலிருந்து கொழும்பு வந்த 3 பெண்கள் வெளிநாட்டில்: குடும்பத்தார் அதிர்ச்சி
Reviewed by NEWMANNAR
on
August 13, 2013
Rating:

No comments:
Post a Comment