மன்னார் மாவட்டம் 30வருடத்தில் காணாத அபிவிருத்தி 3 வருடத்தில்-அமைச்சர் றிசாட் பதியுதீன்
வன்னி மாவட்ட பாராஞமன்ற உறுப்பினரும் முசலி பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான தலைவரும்மான ஹினைஸ் பாருக் தலைமையில் முசலி பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் முசலி பிரதேச ஒருங்கிணைப்பு குழு குட்டம் இடம்பெற்றது.
இதன் போது இந்த நாட்டில் 30 வருட காலமாக ஏற்பட்ட யுத்ததினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள அணைத்து விதமான சொத்துக்ஞம் அழிந்து போன பல வேலை திட்டங்களை செய்து 3 வருடகாலங்களில் நிவர்த்தி செய்துள்ளார் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் என பாராஞமன்ற உறுப்பினர் தெரிவித்தார்
சமுகமட்ட அமைப்புகளினால் பல விதமான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன முசலி பிரதேசத்தில் கட்டப்பட்ட 20 மேற்பட்ட பலநோக்கு சங்கங்கள் இன்னும் திறக்கப்பட வில்லை. பிரதேச சபையினால் பொருத்தப்பட்ட தெரு மின் விளக்குகள் இன்னும் ஒளிர்வதில்லை.பண்டாரவெளி செல்லும் பாதை பல வருடகாலமாக பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. மற்றும் சட்டவிரோதமாக மண் அகழ்வு இன்னும் பல விதமான பிரச்சினைகள் முன்வைக்காப்பட்டன.
இன் நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்.மன்னார் மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் போட்டி போடும் அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் சரீப்.முசலி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பார் கலந்து கொண்டனர்



எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னார் மாவட்டம் 30வருடத்தில் காணாத அபிவிருத்தி 3 வருடத்தில்-அமைச்சர் றிசாட் பதியுதீன்
Reviewed by NEWMANNAR
on
August 17, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 17, 2013
Rating:


No comments:
Post a Comment