அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலின் வெற்றியானது சர்வதேசத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான தமிழ் மக்கள் அனுபவிக்கும் வசந்தத்தின் செய்தியினை தெரிவிக்கும்- சந்தியாகோ செல்லத்தம்பு

1977 ஆம் ஆண்டு தமீழ பிரகடனம் 82 இல் மாகாண சபை 83 இல் இனக்கலவரம்இஅதனை தொடர்ந்து  ஆயுதப் போராட்டம் 90 களில் முஸ்லிம்களின் வெளியேற்றம் 2007 முதல் 2009 வரை நடுப்பகுதி வரை முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்தது இதனை சர்வதேச சமூகம்  பார்த்துக் கொண்டுதான் இருந்தது அதே போன்று தான் இந்த மாகாண சபைத் தேர்தலையும் சர்வதேச பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கும் என  மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர் சந்தியாகோ செல்லத்தம்பு தெரிவித்தார்.

எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த மாந்தை மேற்கு பிரதேச தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலின் வெற்றியானது சர்வதேசத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வசந்தத்தின் செய்தியினை தெரிவிக்கும் ஒன்றாகவே அமையும் என்றும் கூறினார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில் –
அன்று நாம் அகதிகளாக முகாமில் இருந்த போதும்இஅதற்கு பின்னரான மீள்குடியுற்ற செயற்பாடுகளின் போதும்இஅமைச்சர் றிசாத் பதியுதீன் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகளை இன்று எம் கண்முன்காட்சிகளாக பார்க்கி்ன்றோம்.எமது தமிழினத்தை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற கட்சிகள்இஇன்று எமது மக்களின் சுபீட்சத்திற்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறுவதை நாம் ஒரு நம்பி ஏமாந்துவிடப் போவதில்லை.
பல ஆண்டுகாலமாக இருளில் இருந்த எமது மக்களை இந்த அரசாங்கம்இமற்றும் அமைச்சராக இருக்கும் றிசாத் பதியுதீன் எமக்கு வழங்கியுள்ள அபிவிருத்திகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.எமது மக்கள் இன்று எதிர் பார்ப்பதெல்லாம்இஅபிவிருத்தியை நோக்கிய பயணத்தை அன்றி அழிவுப்பாதையினை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.

மாந்தை மேற்கு பிரதேசம் இன்று கண்டுவரும் அபிவிருத்திகள்இஎமது எதிர்கால சந்ததிகளுக்கு கிடைத்த நன்கொடையாகும்.
பாடசாலைகள்இநீர்கால்வாய்கள்இகுளங்கள்இவீதிகள்இமின்சார வசதிகள்இமருத்துவ மணைகள் என்றெல்லாம் எத்தனையோ அபிவிருத்திகள் இன்று சான்றாக இருக்கின்றது.


ஒரு காலம் இருந்தது வெற்றுப் பேச்சுகளுக்கு காதுகொடுத்துஇகையை கிழித்து.இரத்தத்தை நாங்கள் நெற்றியில் பொட்டாய் வைத்தோமேஇஅதன் 5லம் நன்மையடைந்தவர்கள் எமது மக்களல்லஇஆகவே இனியும் அவ்வாறான ஒரு தவறை எமது மக்கள் செய்ய மாட்டார்கள்.இந்த அரசாங்கம் எமக்கு  செய்துள்ள அளப்பரிய சேவைகளைமு்இஎதிர்காலத்தில் செய்யவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்றியுள்ள தமிழர்கள் என்ற வகையில்  இந்த தேர்தலில்  நாம் முழு மூச்சாக இறங்கி அரசாங்கத்தின் வெற்றியினை உறுதிப்படுத்த தயாராகியுள்ளோம்.பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்ற பழமொழிக்கொப்ப இனவாதமற்ற மனித நேயம் கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் சேர்ந்து பயணிக்கு எமது அரசியல் பயணத்தின் வெற்றியும் அவ்வாறே எமக்கும் மணமாக அமைகின்றது என்றும் மாந்தை மேற்கு அபிவிருத்தி குழுவின் தலைவர் சந்தியாகோ செல்லத்தம்பு இங்கு கூறினார்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

தேர்தலின் வெற்றியானது சர்வதேசத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான தமிழ் மக்கள் அனுபவிக்கும் வசந்தத்தின் செய்தியினை தெரிவிக்கும்- சந்தியாகோ செல்லத்தம்பு Reviewed by NEWMANNAR on August 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.