உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகள் வவுனியா மாவட்ட மக்கள் அசௌகரியம்
வவுனியா மாவட்டத்தில் உள்ள பல உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள்
பரிமாறப்படுவதாக நுகர்வோர் குறை கூறுகின்றனர் . இது தொடர்பில் தெரியவருவதாவது :
வவுனியா நகரப் பகுதி உணவகங்கள் உட்பட கிராமப் புறங்களில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் அனைத்திலும் சுகாதாரமற்ற முறையிலே உணவு பரிமாறப்படுவது வழக்கமாகியுள்ளது .
உணவகங்களில் உணவு தயாரிப்போர் சுகாதாரமற்ற அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருப்பதோடு , அவற்றைக்கூட சீரான முறையில் உடல்முழுவதும் மறையும்படியாக அணிந்துகொள்ளாது உணவு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர் . மேலும் உணவு தயாரிப்போர் மற்றும் பரிமாறுவோர் தமது கைகளையும் , நகங்களையும் சுத்தமான நிலையில் வைத்துக் கொள்வதில்லை . குறிப்பாக சிற்றுண்டி வகைகள் , இடியப்பம் , பிட்டு , தோசை போன்றவற்றை உணவு பரிமாறும் உபகரணங்களை கையாளாது கைகளாலேயே பரிமாறுவதும் நடைபெறுகிறது .
மேலும் உணவுப் பண்டங்களை பொதி செய்யும்போது அச்சுத்தாள்களின் பயன்பாடு தடைசெய்யப்பட்டிருந்தும் அச்சுத்தாள்களையே பயன்படுத்துகின்றனர்
. குறிப்பாக குருமன்காடு சந்தியில் உள்ள உணவகங்களில் அச்சுத்தாள்கள் பயன்படுத்தப்படுகிறது . எனவே , இது தொடர்பாக வவுனியா நகர சபையின் சுகாதார பகுதியினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து சுகாதாரமான உணவு தயாரிப்புக்கும் விநியோகத்திற்கும் ஆவன செய்ய வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் .
உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகள் வவுனியா மாவட்ட மக்கள் அசௌகரியம்
Reviewed by Admin
on
September 17, 2013
Rating:

No comments:
Post a Comment