பி.ஐ.டி.பற்றீரியா உபயோகிப்பதனை நிறுத்து தொடர்பில் ஆராய்வு
டெங்கு நோயைப் பரப்பும் நுளம்பைக் கட்டுப்படுத்தும் பி.ஐ.டி.பற்றீரியா உபயோகிப்பதனை நிறுத்துவது தொடர்பில் கொழும்பு மாநகரசபை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக மாநகரசபையானது பெருந்தொகையை செலவிடுகின்ற போதிலும் எதிர்ப்பார்த்த அளவு பலனை பெறமுடியாத உள்ள காரணத்தினாலேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் நுளம்பு தடுப்புப் பிரிவினருடன் , விசேட கலந்துரையாடலொன்றையும் நடத்தவுள்ளதாக வைத்தியர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பி.ஐ.டி.பற்றீரியா உபயோகிப்பதனை நிறுத்து தொடர்பில் ஆராய்வு
Reviewed by Admin
on
September 17, 2013
Rating:

No comments:
Post a Comment