கனடியத் தமிழர் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறது.
சிறி லங்கா அரசின் இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காலற் துறை மற்றும் துணைப் படைகளின் இடையூறுகளையும் தாண்டித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் பலத்த வெற்றியீட்டியுள்ளது. வடக்கில் வாழும் தமிழர்கள் சிறி லங்கா அரசுக்கும் சர்வதேயத்துக்கும் சுயாட்சி மற்றும் சுய நிரணய உரிமை தொடர்பாகத் தங்களை ஆளும் உரிமை தமக்கே உரியது என்கிற உறுதியான செய்தியையும் எதிர்காலத்தில் தங்கள் உரிமைகள் பற்றிய முடிவுகளைத் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதையும் தெரிவித்திருக்கின்றனர்.
இத் தேர்தல் மூலமாகத் தெளிவாகிள்ள தமிழர்களின் விருப்புகளை ஏற்றுக்கொண்டு 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தைச் சிறி லங்கா அரசு முழுமையாவும் உடனடியாவும் நடைமுறைப் படுத்த வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதுபோல் 13ஆவது திருத்தச் சட்டத்தைத் தாண்டியும் தமிழ் மக்களின் விருப்புகளை நிறைவேற்ற அரசு செயற்பட வேண்டியுள்ளது. தமிழரின் நியாயமான கோரிக்கைகளைச் சிறி லங்கா அரசு நிறைவேற்ற பன்னாட்டு அரசுகள் குறிப்பாக இந்திய அரசு அழுத்தங்கொடுக்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை கேட்டுக்கொள்கிறது.
வடமாகாணத் தமிழர்கள் ஆபத்துகளையும் இடையூறுகளையும் தாண்டித் தங்கள் மக்களாட்சி உரிமையை நிலைநாட்ட இத்தேர்தலில் வாக்களித்தமைக்குக் கனடியத் தமிழர் பேரவை மனமார்ந்த நன்றியோடு பாராட்டுக்களையும் தெரிவிக்கிறது. எம் தாய்த் தமிழ் உறுவுகளின் விருப்பங்களையும் உணர்வுகளையும் கனடியத் தமிழர் பேரவை ஏற்றுக்கொண்டும் மதிப்பளித்தும் வருகிறது. அவர்கள் இன்னல்கள் தீர்ந்து சமத்துவமான சமாதானமான நீதியான அமைதியான வளமான மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ கனடியத் தமிழர் பேரவை எப்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் நீதவான் திரு. சி. வி. விக்கினேசுவரன் அவர்களுக்கும் உறுதுணையாய் விளங்கும்.
கூடிய தகவல்களுக்கும் நேர்காணல்களுக்கும்
கனடியத் தமிழர் பேரவை
CTC_Online@yahoogroups.com
கனடியத் தமிழர் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறது.
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment