மன்னாரில் வாக்களித்து விட்டு வெளியில் வந்த பாடசாலை அதிபரான அருட்சகோதரர் ஒருவரும்,ஆசிரியை ஒருவரும் கைதாகி விடுதலை.
குறித்த அருட்சகோதரர் வாக்களித்து விட்டு வெளியில் வந்து நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் கருங்கண்டல் ம.வி பாடசாலையின் அதிபரும்,அருட்சகோதரருமான செபஸ்தியாம் பிள்ளை கிறிஸ்ரி விஜயதாசனும் ஆசிரியை ஜோதினி குரூஸ் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு திரும்பும் போது வெளியில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததால் இவர்கள் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டே கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு விசாரணைகளை பதிவு செய்ததன் பின் இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மன்னாரில் வாக்களித்து விட்டு வெளியில் வந்த பாடசாலை அதிபரான அருட்சகோதரர் ஒருவரும்,ஆசிரியை ஒருவரும் கைதாகி விடுதலை.
Reviewed by Admin
on
September 21, 2013
Rating:
No comments:
Post a Comment