'பசுமை வழி'புதிய செயன்முறை அறிமுகம்
இறக்குமதியாகும் பொருட்களை துறைமுகத்திலிருந்து எடுத்த செல்வதற்கான செயன்முறைகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு புதிய செயன்முறையை சுங்கத்தினைக்களம் அறிமுகம் செய்துள்ளது என சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி இன்று புதன்கிழமை கூறினார் .
புதிய முறையில் இறக்குமதியாளர்கள் தமது ஆவணங்களை ஒரேயொரு சுங்க அதிகாரியிடம் கொண்டுசென்றால் போதுமானது புதிய செயன்முறை பொருட்களை வெளிக்கொண்டு செல்லும் நேரம் 6 மணித்தியாளங்களால் குறைக்குமென கூறப்பட்டது.
'பசுமை வழி' எனப்படும் புதிய முறை மூன்று இறக்குமதியாளர்கள் தொடர்பில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டது படிப்படியாக புதிய முறை விஸ்தரிக்கப்படுமென காமினி கூறினார்.
'பசுமை வழி'புதிய செயன்முறை அறிமுகம்
Reviewed by Admin
on
September 19, 2013
Rating:

No comments:
Post a Comment