தமிழர்களின் விடயத்தில் மீண்டும் இந்தியா கரிசனை : சம்பந்தன்
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா எமது தாய் நாடு இந்தியா இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய பிரச்சினை நியாயமான முறையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் கடந்த காலத்தில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டது.
இடைக் காலத்தில் துரதிஸ்டவசமாக கைவிடப்பட்ட நிலைமை காணப்பட்டது. தற்போது யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் எமது பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அண்மையில் கூட கொண்டுவரப்படவிருந்த ஒரு சட்டமூலம் இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து கைவி;டப்பட்டுள்ளது. இந்தியாவின் கருத்துக்களை உலக நாடுகள் மதிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் கருத்துக்கு எதிராக எமது பிரச்சினையில் ஏனைய நாடுகள் செயல்பட மாட்டாது.
இந்தியா தமிழ் மக்களுடைய விடயத்தில் ஆக்கபூர்வமாக செயலபடுகின்றது. தமிழகத்தில் சுமார் ஆறரைக்கோடி உறவுகள் வாழ்கின்றாhகள் இவர்கள் எமது விடத்தில் அக்கறையுடன் செயலபடுகின்றார்கள். இந்தியாவில் தமிழ் நாடு மட்டும் அன்றி ஏனைய மாநிலங்களில் வர்ழும் மக்களும் கூட எமது விடயத்தில் அக்கறையாக இருக்கின்றார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள தமிழ் தலைமைகள் அனைத்தும் ஒரே கருத்தில் செயல்படுமாக இருந்தால் கூடிய நன்மையை பெறமுடியும் எனவும் தெரிவித்தார்.
தமிழர்களின் விடயத்தில் மீண்டும் இந்தியா கரிசனை : சம்பந்தன்
Reviewed by Admin
on
September 23, 2013
Rating:

No comments:
Post a Comment