இந்திய மீனவர்களின் விடுதலையை துரிதபடுத்த நடவடிக்கை
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலையை துரிதப்படுத்தும் நோக்கில் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மத்திய அரசு இந்த அதிகாரிகளை நியமித்துள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவு துறை இலங்கைக்கு சென்று தமிழக மீனவர்களின் நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார்.
மீனவர் பிரச்சினை பொறுத்தவரை இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது நல்ல முயற்சியாக இருக்காது.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக 2 அதிகாரிகளை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. விரைவில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்
இந்திய மீனவர்களின் விடுதலையை துரிதபடுத்த நடவடிக்கை
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:
No comments:
Post a Comment