உணவு பாதுகாப்பு வாரகாலப்பகுதியில் விற்பனை நிலையங்களை சோதனை செய்ய திட்டம்
உணவு பாதுகாப்பு வாரத்தின்போது உணவு மற்றும் மென்பானங்களை விற்பனை செய்யும் கடைகள் மீது சோதனை நடத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது
.
இந்த ஒரு வார காலத்தின்போது விசேடமான சோதனைகளை நடத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கும், சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கும் ஏனைய சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
போத்தலில் அடைத்த நீர் உற்பத்தியாளர்களுக்கு விசேட வழிகாட்டல்களை அறிமுகம் செய்வதும் இவ்வாரத்துக்கென திட்டமிடப்பட்டுள்ள ஒரு நடவடிக்கையாகும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உணவு பாதுகாப்பு வாரம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கதாகும்.
உணவு பாதுகாப்பு வாரகாலப்பகுதியில் விற்பனை நிலையங்களை சோதனை செய்ய திட்டம்
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment