மன்னார் தனியார் போக்குவரத்து நிர்வாக உறுப்பினர்கள் வட மாகாண போக்குவரத்து அமைச்சரை சந்திப்பு - படங்கள்
மன்னார் தனியார் போக்குவரத்து நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் வட மாகாண கடற்றொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கமிடையில் நேற்று காலை சந்திப் பொன்ற நடைபெற்றது.
மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்க தலைவர் திரு.ரி.ரமேஸ் தலைமையில் மன்னார் நகர சபை அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது மன்னார் தனியார் போக்குவரத்து நிர்வாக சபை உறுப்பிர்கள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் எதிர் நோக்கம் பிச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதன் போது பல தரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இதன் போது மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானபிரகாசம்,நகர சபை உறுப்பினர் ரெட்ணசிங்கம் குமரேஸ் மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது தனியார் போக்குவரத்து சங்க தலைவர் ரமேஸ் அமைச்சருக்கு நினைவுசின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்
லுயிஸ் மாசல்
மன்னார் தனியார் போக்குவரத்து நிர்வாக உறுப்பினர்கள் வட மாகாண போக்குவரத்து அமைச்சரை சந்திப்பு - படங்கள்
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:
No comments:
Post a Comment