வட மாகாண சபையின் கன்னி அமர்வு இருபத்தைந்தாம் திகதி கைதடியில் நடைபெறும்
வடமாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
இரவு 9.30 மணிக்கு யாழ் . கைதடியிலுள்ள வடமாகாண சபைக்கான புதிய தலைமையகக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது .
வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கன்னி அமர்வில் வடமாகாண அமைச்சர்கள் , உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளவுள்ளனர் .
இதேவேளை இக் கட்டடம் அன்று காலை 8.30 மணிக்குத் திறந்து வைக்கப்பட்ட பின்னர் முதலாவது அமர்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இந் நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியும் கலந்து கொள்ளவுள்ளார் . இந்தக் கன்னி அமர்வில் அவைத் தலைவர் தெரிவு , உறுப்பினர்கள் அறிமுகம் என்பவனவும் இடம்பெறவுள்ளது .
இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை வடக்கு மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட சகல உறுப்பினர்களுக்குமான விசேட பயிற்சிக் கருத்தரங்கு யாழ் . ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளது .
இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் உறுப்பினர்களுக்கு மாகாண சபையின் நடைமுறைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் சம்பிரதாய பூர்வமான ஆரம்ப நிகழ்வாக இன்று பால் காய்ச்சும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது .
இந்த நிகழ்வில் காலை 6.30 மணிக்கு கைதடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து படம் எடுத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
வட மாகாண சபையின் கன்னி அமர்வு இருபத்தைந்தாம் திகதி கைதடியில் நடைபெறும்
Reviewed by Admin
on
October 22, 2013
Rating:

No comments:
Post a Comment