கிளிநொச்சியிலிருந்து யாழ் . நோக்கிய புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பம்
கிளிநொச்சியிலிருந்து யாழ் . நோக்கிய புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் தற்பொழுது
விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் . இதற்கமைய ஆனையிறவு புகையிரதப் பாதைக்கும் ஏ -9 வீதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் ஆனையிறவுக் கடல்நீரேரிக்குக் குறுக்காக பாதுகாப்புத் தூண்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
ஏ -9 வீதிக்கும் புகையிரத வீதிக்கும் இடைப்பட்ட பகுதி தூரம் இப் பகுதியில் குறைவாகக் காணப்படுவதால் விபத்துக்களைத் தடுப்பதற்காக இத்தூண்கள் அமைக்கப்படுகின்றன .
மேலும் ஆனையிறவு மற்றும் பளைப் பகுதிகளில் புகையிரப் பாதை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
கிளிநொச்சியிலிருந்து யாழ் . நோக்கிய புகையிரதப் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பம்
Reviewed by Admin
on
October 10, 2013
Rating:

No comments:
Post a Comment