இலங்கையில் முதலாவது தனியார் பல்லைக்கழகம் நிறுவ அங்கீகாரம்
இலங்கையில் முதலாவது தனியார் பல்லைக்கழக வளாகம் நிறுவப்படவுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தால் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.
இதன்படி ஐக்கிய இராச்சியத்தின் மத்திய லங்னாஷயர் பல்கலைகழகத்தின் வளாகம் மீரிகமவில்அமையவுள்ளதுடன் இளவரசர் சாள்ஸ் பொதுநலவாய மாநாட்டுக்கு வரும்போது இந்த புதிய பல்கலைக்கழக வளாகத்திற்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார்.
மேற்படி இந்த வர்த்தமானி அறிவித்தல் மீதான விவாதத்தை தொடக்கிவைத்த முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த திட்டத்தில் 120 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படுமென தெரிவித்தார். இந்த வளாகத்தில் 10000 மாணவர்கள் கல்வி கற்கமுடியும்.
இலங்கையில் முதலாவது தனியார் பல்லைக்கழகம் நிறுவ அங்கீகாரம்
Reviewed by Admin
on
October 10, 2013
Rating:

No comments:
Post a Comment