யாழில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை தங்கு தடையின்றி வழங்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை வடமத்திய மாகாணத்திலேயே சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது.
அங்கு 16 ஆயிரத்து 442 பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன கிருமி நாசனிகள் மற்றும் இரசாயன பசளைகள் காரணமாக யாழ்ப்பாணத்திலும் சிறுநீகர நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் குறிபபிட்டுள்ளார்.
யாழில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Reviewed by Admin
on
October 08, 2013
Rating:
No comments:
Post a Comment