வடக்கு மக்களால் வழங்கப்பட்டிருக்கும் ஆணை இந்தியாவுக்கு அழுத்தத்தை பிரயோகித்துள்ளது : த.தே.கூ. சந்திப்பில் குர்ஷித்
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்டுள்ள பிரமாண்டமான வெற்றிக்கு இந்தியாவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வடக்கு மக்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இந்த வெற்றியானது இந்தியாவுக்கு அரசியல் ரீதியிலான பல்வேறு பாரிய அழுத்தங்களை பிரயோகித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர் விடயத்தில் இந்தியா முழுமையான அக்கறை செலுத்தி பங்களிப்பையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளது. தற்போது இடம்பெற்றிருப்பது முதற்படி மாத்திரமே. இங்கு எதுவும் முடிந்துவிடவில்லையென்றும் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று திங்கட்கிழமை கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியது. இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடயங்களை கேட்டறிந்த குர்ஷித் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்ஏ.சுமந்திரன் ஆகியோர் கலநதுகொண்ட அதேவேளை, அமைச்சர் குர்ஷித்துடன் இந்திய வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு மக்களால் வழங்கப்பட்டிருக்கும் ஆணை இந்தியாவுக்கு அழுத்தத்தை பிரயோகித்துள்ளது : த.தே.கூ. சந்திப்பில் குர்ஷித்
Reviewed by Admin
on
October 08, 2013
Rating:

No comments:
Post a Comment