சாதாரண தரப்பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் இன்று பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெற்றதும் காலதாமதமின்றி பரீட்சார்த்திகளிடம் கையளிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். இவ் அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமாயின் அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முதல் அறிவிக்கப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 மாணவர்கள் தோற்றவுள்ளனர். மேலும் நாடளாவிய ரீதியில் 4300 பரிட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
சாதாரண தரப்பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பிவைப்பு
Reviewed by Admin
on
October 31, 2013
Rating:

No comments:
Post a Comment