அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது சேமக்காலையை புனரமைக்கும் பணியில் மன்னார் நகரசபை முன்முரம் -படங்கள்

இறந்த விசுவாசிகளின் விழாவை ஒட்டி மன்னார் பொது சேமக்காலையை மன்னார் நகர சபை புனரமைத்து வருகின்றது.

அமரத்துவம் அடைந்தவர்களின் நினைவுத்தினமாகிய ஆத்தூமாக்கள் திருநாள் எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை நினைவுகூறப்படவுள்ளது.
இதனை சிறப்பிக்கும் முகமாக மன்னார் பொது சேமக்காலையை கடந்த இரு வாரகாலமாக துப்பரவு செய்யும் பணியினை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த செயற்திட்டத்தை மன்னார் நகரமுதல்வர் திரு.எஸ்.ஞானபிரகாசத்தின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் நகரசபையின் செயலாளர் திரு.பிறிட்டோ அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ்; மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் குறித்த பொது சேமக்காலை மிக மோசமான முறையில் செடிகள் வளர்ந்து காடுகளை போல காட்சி அழித்ததுடன் கவனிப்பாரற்று குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.

இன் நிலையில் மன்னார் நகரசபை குறித்த பொது சேமக்காலையை புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் நகரசபை உறுப்பினர்களின் ஏகோபித்த முயற்சியின் மூலம் குறித்த சேமக்காலை துப்பரவு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டு வருவதோடு சேமக்கலையின் சுவர்கள் புனரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிப்பதாக தெரிவித்த நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை மன்னார் நகரசபை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.












மன்னார் பொது சேமக்காலையை புனரமைக்கும் பணியில் மன்னார் நகரசபை முன்முரம் -படங்கள் Reviewed by Author on October 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.