அண்மைய செய்திகள்

recent
-

450,000 மாண­வர்கள் பார்வை குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் பாலித்த மஹி­பால.

இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பார்வை குறைபாட்டினால்
பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பாலித்த மகிபால தெரிவித்தார் .

சுகாதார அமைச் சின் பாடசாலை நலன் அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவம் நாரேஹன்பிட்டியிலுள்ள தேசிய குருதிச் சேமிப்பு நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனர் .

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

பாடசாலைச் சிறார்களின் 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் குறைந்த பார்வைக் கோளாறினால் அவதியுறுகின்றனர் . இவர்களில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் மிகச் சிறிதளவான பார்வைப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

விசன் 2020 திட்டத்தினூடாக கண் பரிசோதனையின் பின்னர் இவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளதுடன் பழுதடைந்த மூக்கு கண்ணாடிகளுக்குப் பதிலாக புதிய மூக்குக் கண்ணாடிகளும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இவ் வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சரின் பணிப்புரைக்கமைய தேசிய கண் வைத்தியசாலை நிருவாகம் மூக்குக் கண்ணாடிகளைத் தயாரிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது .

பார்வையில் குறைபாடு உள்ள 40 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு விசன் 2020 திட்டத்தினூடாக இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன . 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் பார்வைக் குறைபாடற்ற சமுதாயமொன்றை கட்டி யெழுப்புவதே விசன் 2020 திட்டத்தின் இலக்காவுள்ளது என்றார் .
450,000 மாண­வர்கள் பார்வை குறை­பாட்டால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் பாலித்த மஹி­பால. Reviewed by Admin on October 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.