தெற்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வடக்கில் இருந்து ஆசிரியர்களை இணைத்து கொள்ள திட்டம்
தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் தமிழ் மொழியை கற்பிக்க வட மாகாணத்தில் இருந்து ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரீட்சை எதிர்வரும் 26த் திகதி நடைபெறவுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சையின் முடிவுகளுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட 140 ஆசிரியர்களை உள்வாங்கி சேவையில் இணைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
யாழ் பல்கலைகழகத்தின் வவுனியா வளாக மாணவர்களிடம் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தென் மாகாண அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த ஆசிரியர்கள் உள்வாங்கப்பட்ட பின்னர் தென் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தெற்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வடக்கில் இருந்து ஆசிரியர்களை இணைத்து கொள்ள திட்டம்
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment