அண்மைய செய்திகள்

recent
-

உலக சிறுவர் தினத்தன்று புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானமை குறித்து விசாரணை

உலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானமை குறித்து அரச நிறுவனங்களிடம் கருத்தறிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, 35 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளை எதிர்வரும் 10ம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக அதன் தலைவர் பிரதிபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார். 

 கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக சிறுவர் தினத்தன்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 சித்தியடைய தவறிய மாணவர்கள் சிறுவர் தினத்தன்று வீட்டைவிட்டு வெளியில் விரட்டப்பட்டமை, சூடு வைக்கப்பட்டமை, திட்டப்பட்டமை, மனம் நோகடிக்கப்பட்டமை போன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
உலக சிறுவர் தினத்தன்று புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியானமை குறித்து விசாரணை Reviewed by Admin on October 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.