அண்மைய செய்திகள்

recent
-

அதிவேக தபால் சேவை ஆரம்பம்

பாவனையளர்களுக்கு பல புதுவிதமான வசதிகளை வழங்கவுள்ள அதிவேக தபால் சேவையை தொடங்கும் நிகழ்வுடன் தபால் திணைக்களம் உலக தபால் தினத்தை கொண்டாடவுள்ளது என தபால் மா அதிபர் ரோகன அபயரத்ன தெரிவித்தார். 

 தபால் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க பிரதம விருந்தினராக இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். நவம்பர் முதலாம் திகதியிலிருந்து செயற்படவுள்ள இந்த சேவை மூலம் நாட்டின் எந்த பகுதியில் வாழ்பவரும் 24 மணித்தியாலங்களுக்குள் தபால்கள் அல்லது பொதிகளை பெறக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

 புதிய திட்டத்தின் கீழ் ஆறு மணித்தியாலங்கள், 12 மணித்தியாலங்கள் மற்றும் 24 மணித்தியாலங்களில் தபால்களை வழங்கும் இடங்களை தபால் திணைக்களம் இனங்கண்டுள்ளது.
அதிவேக தபால் சேவை ஆரம்பம் Reviewed by Admin on October 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.