மன்னார் பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி சவூதி அரேபியா டமாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி சவூதி அரேபியா டமாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.
உயிரிழந்தவர் மன்னார் பெற்றாவைச் சேர்ந்த குலசிங்கம் சுரேஸ் குமார்(வயது-28) என தெரியவந்துள்ளது.
சுரேஸ் குமார் கடந்த 2006 ஆம் ஆண்டு தொழில் தேடி சவூதி அரேபியா சென்றுள்ளார். அங்கு கடையொன்றிலும் சாரதியாகவும் கடமையாற்றி வந்துள்ளார்.
வெளிநாடு சென்று சுமார் 7 வருடங்களான நிலையில் இவர் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி நாடு திரும்பவிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் சவூதி அரேபியா டமாம் நகரில் இடம் பெற்ற வாகன விபத்தில் சுரேஸ் குமார் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இவர் இறுதியாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி நாட்டிற்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் பெற்றாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி சவூதி அரேபியா டமாம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Reviewed by Admin
on
October 23, 2013
Rating:

No comments:
Post a Comment