மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் -படங்கள்
மன்னார் மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் விவசாய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை மன்னார் கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி.கே.சுலோஜினி தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து வந்த வறிய மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கிவைக்கப்பட்டது.
2500 ரூபாவிற்கு குறைவான வருமானம் பெறும் வறிய விவசாய குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 11 பாடசாலை மாணவர்களுக்கு தலா 15000 ரூபாவிற்கான வங்கிகணக்குகள் குறித்த புலமை பரிசிலுக்கென வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இன் நிகழ்வின் போது பல கலை நிகழ்சிசிகள் நடைபெற்றன . குறித்த நிகழ்வில் நீர்பாசன தொழிநுட்ப உத்தியோகஸ்தர் திரு.தாஸ் ,கமநல உத்தியோகஸ்தர்கள் , அபிவிருத்தி உதவியாளர்கள் ,பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்
மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் -படங்கள்
Reviewed by Author
on
October 31, 2013
Rating:
No comments:
Post a Comment