5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமெரிக்கா நிதியுதவிவழங்கும் : சிசனுடனான சந்திப்பின் பின் விக்னேஸ்வரன்
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்.நல்லூர் கோவில் வீதியிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் மிச்சேல் ஜே சிசன் இவ்வாறு உறுதிபடத்தெரிவித்துள்ளார்.
அமெரிக்க உயர்ஸ்தானிகர் மிச்சேல் ஜே சிசனுடனான சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
அமெரிக்க மக்கள் சார்பாக உயர்ஸ்தானிகர் அம்மையார் என்னைவந்து சந்தித்துள்ளார். அவர் இங்கு வந்தமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. அமெரிக்க மக்கள் எங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து வைத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்பேற்பட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க முடியும் என்றும் ஆராய்ந்தார். எங்களுடைய சகல விதமான பிரச்சினைகளையும் அவருக்கு தெளிவாக எடுத்துக்கூறினேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமெரிக்கா நிதியுதவிவழங்கும் : சிசனுடனான சந்திப்பின் பின் விக்னேஸ்வரன்
Reviewed by Author
on
October 31, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment