மாவட்ட விவசாய குழுகூட்டம் இன்று மன்னாரில் -படங்கள்
குறித்த நிகழ்வில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டிமெல் கலந்து கொண்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடமும் விவசாயிகளிடமும் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது திணைக்களங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள்பற்றி மேலதிக அரசாங்க அதிபரிடம் தெளிவு படுத்தினர்.
விவசாயிகளின் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் விவசாயிகளின் பிச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இன் நிகழ்வில திவிநெகும செயற்திட்டம், காலபோக நெற் பயிர்செய்கை 2013,2014 எதிர் நோக்கும் பிரச்சினைகள், கால்நடை , நீர்ப்பாசனம், விவசாயம் மற்றும் கால் நடைகளுக்கான காப்புறுதிகள், வங்கிக்கடன் தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இந் நிகழ்வில் அரச உயர் அதிகாரிகள், விவசாய அமைப்புகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் வங்கி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட விவசாய குழுகூட்டம் இன்று மன்னாரில் -படங்கள்
Reviewed by Author
on
October 31, 2013
Rating:
No comments:
Post a Comment