அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்படும் : பிரித்தானியா


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு பதிலாக பிரித்தானியா மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் அந்த நாட்டை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என பிரித்தானிய சிரேஷ்ட அமைச்சர் பாரோனஸ் வர்சி தெரிவித்துள்ளார். 


பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் விவாத்தில் 2015 சர்வதேச அபிவிருத்திக்கான கட்டமைப்பை மேம்படுத்துவது, பொதுநலவாயத்தின் மதிப்புகள் பற்றிய விவாதங்களும் உள்ளடக்கப்படும். 

அதேவேளை பாலியல் வன்முறை பற்றிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வர தேவையான சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுநலவாய மாநாடு ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நல்லிணக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள், தூதரக கவலைகள் மற்றும் இருதரப்பு பிரச்சினைகள் தொடர்பில் அமைப்பின் சக உறுப்புகள் நாடுகள் ஊடாக அழுத்தங்கள் கொடுக்கப்படும். 

அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வழியாக இலங்கை வழங்கிய பல வாக்குறுதிகள் தொடர்பில் கேள்விகளை எழுப்ப இந்த மாநாடு ஒரு பிரகாசமான வாய்ப்பாக அமையும் என பிரித்தானியா நம்புகிறது. 

ஆணைக்குழுவின் சில பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. எனினும் பல பரிந்துரைகள் குறித்து நினைவூட்டப்படும். மனித உரிமை பிரச்சினைகள், நல்லிணக்கம், அரசியல் தீர்வு தொடர்பில் உறுதியான முன்னேற்றகரமான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானியா கடுமையாக செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கும். 

இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும். பிரித்தானியாவிடம் இருந்து மட்டுமல்ல உலக ஊடகங்கள் அனைத்தும் கொழும்பில் இலங்கை அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பும் என்றார். 


மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அழுத்தம் கொடுக்கப்படும் : பிரித்தானியா Reviewed by Author on October 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.