பிரதமர் யாழ்ப்பாணத்திற்கும் வருவாராயின் அவர் மாநாட்டுக்காக இலங்கைக்கு வருவதை எதிர்க்கவில்லை.கூட்டமைப்பு.ஹிந்து.
இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்தியபிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்திற்கும் வருவாராயின் அவர் மாநாட்டுக்காக இலங்கைக்கு வருவதை தாம் எதிர்க்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைபபு அறிவித்துள்ளது என ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது .
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,
தமிழ்நாட்டின் உணர்வுகளை கவனத்தில் கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் புதுடில்லியிடம் வலியுறுத்தியுள்ளார் . நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் மாநாட்டை பகிஷ்கரிப்பதென்ற கனடாவின் தீர்மானத்தை முன்னர் ஆதரித்தனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த மாநாட்டை பகிஷ்கரிக்கும் என கூறினார் .
தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்தியாவும் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென ஒரு சாரார் வலியுறுத்தினர் . ஆயினும் , தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் , இலங்கை மீது இந்தியாவுக்கு கூடுதல் செல்வாக்கை பெற்றுக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதுவதால் சிங் அவர்களின் வருகையில் திறந்த மனதோடு உள்ளனர் .
மாநாட்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு கொழும்பை தூன்டியதற்கு நன்றி தெரிவித்து இரா . சம்பந்தன் இந்திய பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் . இது டாக்டர் சிங் , மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக விக்னேஸ்வரன் திறந்த மனதோடு உள்ளார் எனும் ஊகத்துக்கு வித்திட்டது .
தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான நோக்கம் இல்லையென மறுத்தது . விக்னேஸ்வரன் மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பான கூட்டம் யாழ் . பொது நூலகத்தில் நடந்த பின்னர் அவர் மாநாட்டில் பங்கு மாட்டாரரென அறிவிக்கப்பட்டது . ஆயினும் , புதுடில்லியிலுள்ள வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் விக்னேஸ்வரன் மாநாட்டில் பங்குபற்றுவாரென கூறின .
டாக்டர் சிங்கின் வருகையை எதிர்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் உள்ள பகுதியினர் அவரின் பங்குபற்றல் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை அங்கீகரிப்பதாக அமையுமென கூறி செய்தி வெளியிட்டுள்ளது .
ஆனால் தமிழ்நாட்டில் இந்தியப் பிரதமர் இலங்கைக்குப் போகக் கூடாது என மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
பிரதமர் யாழ்ப்பாணத்திற்கும் வருவாராயின் அவர் மாநாட்டுக்காக இலங்கைக்கு வருவதை எதிர்க்கவில்லை.கூட்டமைப்பு.ஹிந்து.
Reviewed by NEWMANNAR
on
November 08, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 08, 2013
Rating:


No comments:
Post a Comment