அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தபால் சேவை வரலாற்றில் முதன்முறையாக அதிவிரைவு தபால் சேவை

இலங்கை தபால் சேவை வரலாற்றில் முதன்முறையாக அதிவிரைவு தபால் சேவை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது . நாடளாவிய ரீதியில் அதிவிரைவு தபால் சேவை நேற்று முற்பகல் 10 மணி ஒரு நிமிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது . 

 அதிவிரைவு தபால் சேவையின் ஊடாக 24 மணித்தியாளத்திற்குள் தபாலை உரியவருக்கு சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது . நாடளாவிய ரீதியில் 9 வாகனங்கள் இந்த சேவையில் ஈடுப்பட்டுள்ளன . இதன்பிரகாரம் கிழக்கு மாகாணத்திலும் அதிவிரைவு தபால் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு மாகாண தபால் மாஅதிபர் வாசுகி அருள்ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது . 

 மட்டக்களப்பு பிரதான தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம தபால் அதிபர் , சிரேஷ்ட நிர்வாக செயலாளர் , உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர் . குறைந்த கட்டணத்தில் இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன் , 20 கிராமிற்கு ஆரம்ப விநியோக வலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50 ரூபா கட்டணமும் , ஏனைய பகுதிகளுக்கான விநியோகக் கட்டணமாக 60 ரூபாவும் அறவிடப்படவுள்ளது . மேலதிக ஒவ்வொரு 10 கிராமிற்கும் 10 ரூபாவால் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் , கிழக்கு மாகாண தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார் .
இலங்கை தபால் சேவை வரலாற்றில் முதன்முறையாக அதிவிரைவு தபால் சேவை Reviewed by NEWMANNAR on November 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.