பாடசாலை நேரத்தில் விழாக்கள் நடாத்த தடை
பாடசாலை நேரத்தில் விழாக்களை நடாத்துதல் மற்றும் சுற்றுலா செய்தல் என்பன தவிர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கோரிக்கையினை விடுத்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை நேரங்கள் பரிசளிப்பு உள்ளிட்ட விழாக்களை நடாத்துதல் மற்றும் சுற்றுலா செல்லுதல் என்பன தவிர்க்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டும் இதுவரை சரியான முறையில் செயற்படுத்தவில்லை.
எனவே எதிர்வரும் காலங்களில் அவ்வாறான நிலைமை நிறுத்தப்பட வேண்டும்.
எனினும் ஜனாதிபதியுடனான மாணவர் சந்திப்புக்களில் மாத்திரம் பாடசாலை நேரத்தினை எடுத்துக் கொள்ள முடியும் என்றார்.
பாடசாலை நேரத்தில் விழாக்கள் நடாத்த தடை
Reviewed by NEWMANNAR
on
November 20, 2013
Rating:

No comments:
Post a Comment