அண்மைய செய்திகள்

recent
-

வரவு-செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் சற்றுமுன்னர் சமர்ப்பிப்பு

இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 68 ஆவது வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். அவர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் சற்றுமுன் வரை வாசிக்கப்பட்டவை. 

 வெளிநாட்டு வேலைவாய்ப்பு வருமான 7000 மில்லியன் ரூபாவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. துணி இறக்குமதியை 6 வீதத்தால் அதிகரிக்க யோசனை மற்றும் கட்டுமான கைத்தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக தற்போது உள்ளது. வெளிநாட்டவர்கள் காணி கொள்வனவு செய்வதை முற்று முழுதாக நிறுத்த சட்டம் கொண்டுவரப்படும் என்பதுடன் வங்கிகளை நாங்கள் தனியார் மயப்படுத்தமாட்டோம். 

 தனியார் மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு அதனூடாக அந்த நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கப்பட்டு அந்த வருமானம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.அத்துடன் அரசாங்க தொழிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 2016 ஆம் ஆண்டளவில் 3.6 வீதமாக குறைக்கப்படும். 

அத்துடன் அரச கடன் கொடுத்தலும் குறைக்கப்படும். நிவாரணத்தை வழக்கும் அரசாங்கம் என்றவகையில் வாகனங்கள், மதுபானங்கள் மற்றம் சிகரெட் ஆகியவற்றின் மீதான வரிகள் ஊடாக வருமானத்தை ஈட்டவேண்டியுள்ளது. அத்துடன் தேசத்தை கட்டியெழுப்பும் வரி வங்கிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
வரவு-செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் சற்றுமுன்னர் சமர்ப்பிப்பு Reviewed by NEWMANNAR on November 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.